
நடிகை அமலாபால், தன் காதலர் பற்றிய விபரங்களை தெரிவிக்க மறுத்துள்ளார். அமலா பால் நடித்த ஆடை 19ம் தேதி ரிலீசாகிறது. படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பேட்டி கொடுத்து வருகிறார் அவர்.
ஒரு பேட்டியில், தான் காதலிப்பதாகவும், அவரிடம் ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை என அமலா கூறியிருந்தார். அமலா பால் யாரை காதலிக்கிறேன் என கூறாத நிலையில், யாராக இருக்கும் என ரசிகர்கள் தேடி வருகிறார்கள் .
அமலா பால் காதலருடன் பாண்டிச்சேரியில் குடியேறியிருப்பது தெரியவந்துள்ளது.பாண்டிச்சேரியில் யாரும் உங்களுடன் இருக்கிறார்களா என கேட்டதற்கு நான் யாரோடிருந்தால் உங்களுக்கு என்ன?அது என் தனிப்பட்ட விஷயம்,அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என அமலா பால் பதில் அளித்தார்.