

மேயாத மான் படம் மூலம் பெரிய திரைக்கு வந்த ப்ரியா பவானி சங்கர் வளர்ந்து கொண்டே இருக்கிறார். அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் மாபியா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ப்ரியா பவானி சங்கருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ப்ரியா விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து இன்று நேற்று நாளை 2 படத்திலும் நடிக்கிறார். சத்தமில்லாமல் படுவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் ப்ரியா. கமல், விக்ரம் என்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.