அங்கு அவர் பிளாக் காபி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஓவியா, மலையாளத் திரையுலகில் தான் அறிமுகமானார். தொடர்ந்து மலையாள படங்கள் அவருக்கு அமையவில்லை. அங்கு அவர் மூன்று படங்கள் நடித்த பின்பு தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை ருசிக்க முடியாமல் இருந்த ஓவியாவைத் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடித் தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றாலும் கூட, அடுத்து ஏனோ அவருக்குத் தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. நடுவில் வந்த 90 எம்.எல் என்ற அடல்ட் படம் அவரது செல்வாக்கை இன்னும் கொஞ்சம் காலி செய்தது. இடையில் கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த ஓவியா 2011ஆம் ஆண்டுக்குப் பின் தாய் மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. பாபுராஜ் தான் என்னை நடிக்கச் சொல்லி தூண்டினார். அவரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். மேலும், நல்ல கதை என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பற்றி கருத்து எதுவும் இன்னும் சொல்லாமல் அவருடைய ஆர்மியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மவுனம் காத்துவருகின்றனர்.