கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, ஒரு தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும், அதே நேரத்தில் தனது கட்சியை பலப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில்தான் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருடைய ரசிகர்கள், சினிமா துறையினர், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, சமூக ஊடகங்களில் #கமலிசம் என்ற வார்த்தையும் ட்ரெண்டாகி வருகிறது.
கமலின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா தொடங்கி தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் இந்தியன் 2 ஸ்டில்கள் வரை, அந்த கமலிஸத்தில் இடம் பிடித்து வருகின்றன. எத்தனையோ வாழ்த்துக்கள் வந்தாலும் அன்பு மகள் ஸ்ருதியிடம் இருந்து வந்தது சிறப்பு பரிசாகவே கமல் கருதுகிறார். ஸ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்பாவுடைய பொக்கிஷமான நடிப்பை கவுரப்படுத்தி எழுதி உள்ளார். ஸ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்பாவுடைய பொக்கிஷமான நடிப்பை கவுரப்படுத்தி எழுதி உள்ளார்.