நடிகை ஷில்பா ஷெட்டி ரூ. 10 கோடி கொடுக்கிறோம் என்று கூறியும் விளம்பர படம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் மூலம் பிரபலமாக உள்ளார். அதனால் அவர் படங்களில் நடிக்காதது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. தினமும் யோகா, ஒர்க்அவுட், தியானம் செய்யத் தவறாதவர் ஷில்பா ஷெட்டி. இஞ்சி இடுப்பழகி என்ற பட்டத்தை ஷில்பாவுக்கு தான் கொடுக்க வேண்டும். உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்.
Image result for shilpa shetty refused to act in an ad

இந்நிலையில் உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மாத்திரை விளம்பரத்தில் நடிக்குமாறு ஷில்பாவிடம் கேட்க அவரோ சற்றும் யோசிக்காமல் முடியாது என்று கூறிவிட்டாராம். மேடம், ரூ. 10 கோடி சம்பளம் தருகிறோம் என்று விளம்பரதாரர்கள் கூற எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம் ஷில்பா. எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை நான் விற்பனை செய்ய மாட்டேன். உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள், fad diets போன்றவை உடனே பலன் அளிக்கும் என்பதால் கேட்க நன்றாக உள்ளது.



ஆனால் சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதை எந்த மாத்திரையாலும் அடித்துக் கொள்ள முடியாது. நம் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் பல காலம் நல்லபடியாக வாழலாம் என்று தெரிவித்தார். உடல் எடையை குறைக்க கண்டதையும் வாங்கி சாப்பிடாமல் இயற்கையான முறையில் யோகா, ஒர்க்அவுட் செய்வதுடன் சத்தான உணவை சாப்பிடுமாறு இளம் தலைமுறையை வலியுறுத்தியுள்ளார் ஷில்பா ஷெட்டி.


Find out more: