இது ஒரு திரில்லர் படம். விமர்சகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து எவரு படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு டிவீட் செய்துள்ளார். அதாவது தனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், தன்னுடன் காபி குடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். "எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?" என அவர் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என ரெஜினா கூறியுள்ளார். இந்த போட்டியின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்பட்டு, நாளையே ரெஜினாவுடன் வெற்றியாளர் காபி குடிக்கலாம்.
இதனால் அவரது ரசிகர்கள் மாஞ்சி, மாஞ்சி பதில் அளித்து வருகின்றனர். இன்னும் படம் பார்க்காதவர்கள், எவரு ஓடும் தியேட்டருக்கு விரைந்துள்ளனர். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் பல நடிகைகள் தவிர்த்து வரும் போது, தன்னுடைய படத்திற்காக தானே போட்டி அறிவித்துள்ள ரெஜினாவை தெலுங்கு திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.
பல நடிகைகள் தவிர்த்து வரும் போது, தன்னுடைய படத்திற்காக தானே போட்டி அறிவித்துள்ள ரெஜினாவை தெலுங்கு திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.