

இவர் மானே தேனே பொன்மானே எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர். டப்பாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார். சரியான வாய்ப்புகள் அமையாததால் ரம்யா நடித்த சில படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இருப்பினும் அவர் ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் அவரது மனைவியாக நடித்தார் ரம்யா பாண்டியன். அதுவும் ஒரு குடும்ப பாங்கான கதை.
இது வரையில் குடும்பப் பெண்ணாகவே நடித்து வந்த ரம்யா பாண்டியன் சரியான பட வாய்ப்புகளோ அல்லது சரியான படத்தை தேர்வு செய்யாத காரணத்தாலோ அவரால் தனது நடிப்பு திறனை வெளிக்காட்ட முடியவில்லை. இது வரையில் அவர் கலாச்சாரமான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியிட்டு வந்தவர் தற்போது கவர்ச்சி உடைக்கு மாறியிருக்கிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்று நினைத்தாரோ என்னவோ விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.