அவர் சொன்னதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரியவந்தன. நமக்கு கொஸ்டினுக்கு ஆன்சர் தெரியலைன்னா கூட சும்மா பக்கம் பக்கமா எழுதி பத்து மார்க் போடுறதுக்கு பதிலா, பரிதாபப்பட்டு அட்லீஸ்ட் அஞ்சு மார்க்காவது நமக்கு போட்ருவாங்க. ஏன்னா பேப்பர் திருத்துறவங்க நம்ம எழுதுன எல்லா பக்கத்தையும் படிச்சி பாக்க மாட்டாங்க என்று அப்பாவியாக சொன்னார். பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பின்னாடி நானும் அப்பாவும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம். எல்லா விசயத்தையும் ஷேர் பண்றோம். நான் யாருங்கிறதை பிக் பாஸ் வீட்டுல இருக்கும்போது அப்பா பாத்துட்டாரு. அதனாலயே நானும் அப்பாவும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம். நான் கடந்த ஆறு வருஷமா சினிமா ஃபீல்டுல இருக்கேன்.
ஆனாலும் பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்த பின்னாடி தான் கொஞ்சம் பாப்புலர் ஆயிட்டேன்னு நினைக்கிறேன். பிக் பாஸ் வீட்டுல இருக்கும்போது, நான் அதை ஒரு விளையாட்டா பாக்கலை. நான் வீட்டுல எப்படி இருந்தேனோ, அதே மாதிரிதான் அங்கயும் இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது, விளையாட்டை விளையாட்டா பாக்கணும்கிறதை பிக் பாஸ் வீட்டுல வந்த பின்னாடி தான் தெரிஞ்சிகிட்டேன்.