

ஆரம்ப காலத்தில் கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னா, சில படங்களில் கவர்ச்சி காட்டி இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்ட தாகத்தான் இருக்கும். அவர் பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலேயே நடித்திருந்தார். தற்போது டோலிவுட்டில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது நடிகை தமன்னா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பெயர் ஆக்ஷன். இந்த திரைப்படத்தின் கதைக்கரு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கூடங்களில் நடக்கும் சம்பவத்தை வைத்து திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் தான் இருந்தது. இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கிறதாம். இந்த திரைப்படம் வெளியானதும் இந்த கதாபாத்திரம் பேசப்படும். விஷாலுடன் இவரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான முறையான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார் என்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கிறதாம். இந்த திரைப்படம் வெளியானதும் இந்த கதாபாத்திரம் பேசப்படும். விஷாலுடன் இவரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான முறையான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார் என்கிறார் இயக்குநர் சுந்தர் சி.