

இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம்.
இந்த படத்திற்காக புதுக்கோட்டையில் ஒரு பழைய பங்களாவில் இரவு நேரத்தில் திகிலான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த பங்களாவில் உண்மையான சில அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்த கதாநாயகிகள் எங்களுக்கு பயமாக இருக்கிறது நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். அதன் பிறகு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி புரியவைத்து நடிக்க வைத்தோம். முதலில் அப்படி சொன்ன இயக்குனர் படப்பிடிப்பு முடிந்தவுடன் நானும் அதை உணர்ந்தேன் என்று ஒரு வித பயத்துடன் கூறினார். ஷூட்டிங் நடப்பதை பார்க்க அந்த ஊர்மக்களே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாவில் கதவு, ஜன்னல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதல் வித்தியாசமான காட்டவேண்டும் என்பதற்காக அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் செலவு செய்து அப்புறபடுத்தி, பின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டு வைத்துக் கொடுத்தோம். கதவு, ஜன்னல்கள் இல்லா பேய்படம் இது. ராஜா காலத்து பங்களா என்பதால் அனைத்தும் தேக்கு மரங்களால் வைகப்பட்டிருந்தன.
முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும் தான் அந்த பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். இது மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல் இன்றய இளைய சமுதாயத்தின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் படமாக இந்த ஆண்கள் ஜாக்கிரதை இருக்கும் என்றார் இயக்குனர் K.S.முத்துமனோகரன். சுஜி ஜீசஸ் பிலிம்ஸ் செந்தில்குமார் படத்தை பிரமாண்டாமான முறையில் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.