ஜெமினி சினிமாஸ் ஜெனிமி ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ்    முருகானந்தம்  இணைந்து தயாரித்துள்ள  படம் ஆண்கள் ஜாக்கிரதை. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்
Image result for Aangal Jaakirathai movie
 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது, "ஜெமினி ராகவா தயாரிப்பாளராக தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருப்பார் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்றார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது,

 

"ஜெமினி ராகவா சினிமாவை நேசிக்க கூடியவர். சினிமா நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். அவர் இந்தப்படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டேன் என்றார். இயக்குநரும் அவரும் ஒன்றாக வந்து அதைப் பெருமையோடு சொன்னார்கள். படத்தின் ட்ரைலர் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

 

"ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி  இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்பார் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து  படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்

 

 


Find out more: