ஒளிப்பதிவாளர் எம்
எஸ் பிரபு பேசியதாவது,
"பெரிய படம் சின்னபடம் என்பது இல்லை. நல்லபடம் நல்லா இல்லாத படம் அவ்வளவு தான். அப்படி நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறேன். சேரன் திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக நடித்துள்ளார்" என்றார்
இயக்குநர் சரண் பேசியதாவது,
" அனைவரையும் இயக்குநர் சாய் ராஜ்குமார் சார்பாக வரவேற்கிறேன். சேரன் எனக்கு முன்பாகவே நல்ல பழக்கம். சேரன் ஹீரோவாக இருந்தாலும் இயக்குநராக இருந்தாலும் எனக்கு அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தோஷம். இப்படத்தின் இயக்குநர் சாய்ராஜ்குமார் என்னிடம் மிகச்சிறப்பாக பணியாற்றினார். என் படங்களில் இருந்த நிறைய நல்ல விசயங்களில் எல்லாம் சாய் ராஜ்குமாரின் பங்களிப்பு இருந்தது. அவரின் உழைப்பு பெரிதாக இருக்கும். இப்படத்தில் அவருக்கு ஒரு பெரிய சேலஞ்ச் இருந்தது. அதை அற்புதமாக கையாண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக கேமராமேன் எம்.எஸ். பிரபு இருந்திருக்கிறார். ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு படத்தை ஈசியாக டிசைன் பண்ணிடலாம். இதுபோல சின்ன படங்களை நல்ல படங்களை டிசைன் செய்வது தான் கஷ்டம். அதைச் சிறப்பாக இப்படத்தின் தயாரிப்பாளர்கள் செய்துள்ளார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள் " என்றார்
நடிகர் இர்பான் பேசியதாவது,,
"இப்படத்தில் நடிக்கும் போது ரொம்ப பயமா இருந்தது. போகப்போக செட் ஆகிட்டேன்..மிகச் சிறப்பாக படம் வந்திருக்கிறது. சேரன் சார் எம்.எஸ் பிரபு சார் எங்களை மிகவும் சவுகரியமாக வைத்துக்கொண்டனர். இந்தப்படம் இயக்குநர் சாய் ராஜ்குமாருக்கு பெரிய வெற்றியைத் தேடித் தரும்" என்றார்.
நாயகி ஸ்ருஷ்டிடாங்கே பேசியதாவது,
"இப்படத்தின் ஹீரோ கதை தான். இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் பண்றேன். நிச்சயமா இப்படத்திற்கு பிறகு நிறையபேர் என் கேரக்டர் பற்றியும், படம் பேசியும் பேசுவார்கள் என நம்புகிறேன். இந்த நல்ல படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தில் ஒரு மிக முக்கியமான சீன் பண்ணிருக்கேன். அப்படியொரு காட்சியில் வேறு எந்த நடிகையும் நடிக்கவில்லை. ஒரேயொரு நடிகை தான் நடித்துள்ளார். அதன்பின் நான் தான் நடித்துள்ளேன்" என்றார்
இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது,
"ஒரு மனிதன் அப்பாவாகும் தருணம் மிக முக்கியமானது. எனக்கு பையன் பிறக்கும் போது கூட அப்பாவாக உணரவில்லை. என் மகனுக்கு 104 டிகிரி காய்ச்சல் வந்தபோது மூன்று மணிநேரம் தோளில் வைத்திருந்தேன். அப்போது தான் நான் அப்பாவாக உணர்ந்தேன். அதுபோல் சேரனை அப்பாவாக இப்படத்தில் பார்த்தது மிகவும் பொருத்தமாக இருந்தது" என்றார்
இயக்குநர் சேரன் பேசியதாவது,
"இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர மிக அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும்
ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக்குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ் பிரபு கதைக்குள் அடங்குகிற கேமராமேன் அவர். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்" என்றார்
இயக்குநர் சாய் ராஜ்குமார் பேசியதாவது,
"என்னை அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொண்ட வசந்த் சாருக்கு முதல் நன்றி. அடுத்து சரண் சாரிடம் ஐந்து படங்கள் வேலை செய்தேன். எஸ்.பி சரண் தான் என்னை மழை படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பத்மநாபன் தான் இந்தப்படத்தை வாங்கிக் கொடுத்தார். அவருக்கும் நன்றி. இப்படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தயாரிப்பாளர்கள் செய்து கொடுத்தார்கள். சேரன் சாரிடம் இப்படத்திற்காக முதலில் பேசும்போது ஒத்துவரவில்லை. ஆனால் நான் அவரை விடவில்லை. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை ரிபிளேஸ் பண்ணிட்டு இன்னொரு ஹீரோவை நினைத்தே பார்க்க முடியாது. அதேபோல் இப்படத்தில் சேரனைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இர்பானை நெகட்டிவ் ரோல் பண்ணச்சொன்னேன்.அவர் யோசித்தார். ஆனால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டிடாங்கே கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. இதுபோல் எல்லாக் கேரக்டர்களும் வித்தியாசமானதாக இருக்கும். எம்.எஸ் பிரபு சார் அப்படி ஒரு ஸ்பீடான கேமராமேன். இசை அமைப்பாளர் வினோத் எஜமான்யா தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணிருக்கிறார். இப்படத்தின் ஆர் ஆர் மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. மேலும் ஆர்ட் டைரக்டர், எடிட்டர் எல்லோரும் படத்தில் நிறைய உழைத்திருக்கிறார்கள்." என்றார்