RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் கருத்துக்களைப் பதிவுசெய். இப்படத்தின் சாராசம்சம் செல்போன்களால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றியது. மேலும் இளைஞர்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ள படமாகவும் உருவாகி இருக்கிறது. அதனாலே இப்படக்குழுவை தொல்.திருமாவளவன் நேரில் அழைத்து தனது  பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
ராகுல் பரமகம்சா  இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு இணைத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசியதாவது,

"இந்தப்படம் ஒரே நைட்டில் முடிவான படம். இந்தப்படம் இந்தளவிற்கு வந்ததற்கான காரணம் இயக்குநர் மற்றும் அவரது டீமும் தான். ஒருகாலத்தில் படம் எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. பின் படம் எடுத்துவிடலாம் ஆனால் வெளியிட முடியாது என்றார்கள். இப்போது இசை வெளியீட்டு விழா நடத்த முடியாது என்றார்கள். இது அத்தனையும் சாத்தியமானது இப்படத்தில் தான். அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி" என்றார்

இயக்குநர் ராகுல்பரமகம்சா பேசியதாவது,

"வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கருத்துக்களை பதிவுசெய் படம் தயாரிப்பாளர் சொன்னது போல ஓர் இரவில் முடிவு செய்தபடம். பட்ஜெட் என்பதை மனதில் வைத்து நாட்டுக்குத் தேவையான கருத்துள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படத்தின் இயக்குநர் மட்டும் தான் நான். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எல்லாம் ராஜசேகர் தான். இந்தப்படத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதன்பிறகு அதைச் சரிசெய்தவர் மோகன் சார் தான். இந்தப்படத்தை சக்சஸ் புல்லா எடுக்க முடிந்ததிற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம். அப்படங்களில் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறோம். அதேபோல் இப்படத்தில் நிறைய நல்ல விசயங்களை சொல்லியுள்ளோம். தயவுசெய்து அதையெல்லாம் பாலோ பண்ணுங்கள்.  இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இப்படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்

சட்டமன்ற உறுப்பினர் திருமதி.விஜயதரணி அவர்கள் பேசுகையில்

சமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால்  தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடபட்ட அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும் வகையில் அதை அமைக்க கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்ப போகிறேன். மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சய் கடம்பூர்.ராஜீ அவர்களிடம் கேட்க போவதாக அறிவித்துள்ளார்.

Find out more: