மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது

சோனு பேசும்போது,

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.

பாடலாசிரியர் சிவா பேசும்போது,

இப்படத்தில் 4 பாடல்களையும் நான் தான் எழுதினேன். இப்படத்திற்கு மற்றவர்களை விட தனாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது. இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. சித்ஸ்ரீராம் பாடகராக வந்ததும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்தது. புதுபுது யோசனைகளைக் கூறினார் என்றார்.

ராதிகா சரத்குமார் பேசும்போது,

சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். பிறகு எனக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி.

நான் சித்ஸ்ரீராமின் ரசிகை. அவருடைய நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நேரமின்மை காரணமாக போக இயலவில்லை. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சோனு ஆகியோருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.

சரத்குமார் பேசும்போது,

தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது

சோனு பேசும்போது,

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.

பாடலாசிரியர் சிவா பேசும்போது,

இப்படத்தில் 4 பாடல்களையும் நான் தான் எழுதினேன். இப்படத்திற்கு மற்றவர்களை விட தனாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது. இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. சித்ஸ்ரீராம் பாடகராக வந்ததும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்தது. புதுபுது யோசனைகளைக் கூறினார் என்றார்.

ராதிகா சரத்குமார் பேசும்போது,

சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். பிறகு எனக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி.

நான் சித்ஸ்ரீராமின் ரசிகை. அவருடைய நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நேரமின்மை காரணமாக போக இயலவில்லை. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சோனு ஆகியோருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.

சரத்குமார் பேசும்போது,

தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.

Find out more: