அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

 

நடிகர் ரவிமரியா பேசும்போது,

 

தமிழ் சினிமாவில் மிக அரிதாக நடக்கும் விழா வெற்றி விழாவாக இருக்கிறது. ஆனால், கடந்த 3 நாட்களில் திருவிழா கோலாகலமாக திரையரங்கம் நிறைந்து காட்சியளிக்கிறது. பொதுவாக இதுபோன்ற வெற்றி விழாவில் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து ‘நான் சிரித்தால்’ படத்தின் வெற்றியை மட்டுமே பேசுங்கள். ஏனென்றால், இப்படம் சுந்தர்.சி,ஆதி கூட்டணிக்கு  ஹாட்ரிக் வெற்றி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படம் வெற்றிபெறவில்லையென்றால், நான் சினிமாவிலிருந்தே விலகி விடுவேன் என்றேன். நான் கூறியதுபோல் இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. திரையரங்கில் படவா கோவி, இயக்குநர் ரவிக்குமார் மற்றும் ஒவ்வொரு நடிகர்களும் காட்சியில் தோன்றும்போது பார்வையாளர்கள் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். இயக்குநர் ராணா ஒவ்வொருவரையும் நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ப கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் போல மாபெரும் இயக்குநராக ராணா வருவதற்கு வாழ்த்துகள்.

 

அன்று குஷ்பூ, பிறகு நயன்தாரா ஆகியோர்களை அனைவருக்கும் பிடித்தது போல இன்று ஐஸ்வர்யா மேனனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சுஜித் பேசும்போது,

 

இந்த வாய்ப்பைக் கொடுத்த சுந்தர்.சி, ராணாவிற்கு நன்றி. தெலுங்கில் ‘டியர் காமரேட்’ வெற்றி படத்தில் பணிபுரிந்த பிறகு, தமிழில் இப்படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி என்றார்.

 

 

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது,

 

இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும்.

 

மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

 

நடிகை குஷ்பூ பேசும்போது,

 

இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தார் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

Find out more: