இத்தொடரின் வடிவமைப்பாளர் நீரஜ் பாண்டே கூறியதாவது...
“ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இந்த கதை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே யோசித்துகொண்டிருந்தேன். இது மிகப்பெரும் கதை, அதன் பின்னணி ஆதாரங்கள், தரவுகள், ஆராய்ச்சிகள் எல்லாம் மிகப்பெரும் பணியை கோரியது. இத்தனை பெரிய கதையை ஒற்றைப்படமாக கூறவியலாது. கதை கூறும் தளமே மாறிவிட்ட இந்த இணைய உலகு இப்போது இந்த கதையை கூற பெரும் ஆதரவாக அமைந்துள்ளது. இரண்டு தசாப்தங்கள் நீடிக்கும் இந்தக்கதையை பல உண்மைசம்பவங்களுடன் பரபரப்பு சிறிதும் குறையாத மிகபிரமாண்ட வடிவில் உருவாக்கியுள்ளோம். முதல் முறையாக 2001 பாராளுமன்ற தாக்குதல் இத்தொடர் மூலம் திரையில் வரவுள்ளது. ஆனால் அதைத்தாண்டி எண்ணற்ற ஆச்சர்யங்கள் இத்தொடரில் கொட்டிக்கிடக்கிறது.
நடிகர் கே கே மேனன் கூறியதாவது...
Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்திய உளவுத்துறையின் நேர்த்தியான வடிவத்தை திரையில் வழங்கியிருக்கிறது. உண்மையில் முகம் மறைக்கப்பட்ட நிஜ ஹீரோக்கள் நம் உளவுத்துறை அதிகாரிகள் தான். இயல்பில் அவர்கள் நம்மை போல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். மக்கள் கூட்டத்தில் இணைந்து, மக்களோடு மக்களாக இருப்பார்கள் ஆனால் 24 மணிநேரமும் உளவாளியாகவே விழித்திருப்பார்கள். நாட்டுக்கு ஏறபடும் அச்சுறுத்தல்கள், ஆபத்துகளில் இருந்து நாட்டை காப்பார்கள். Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்த உன்னதமிக்க உளவாளிகளின் வாழ்வை அழகாக திரையில் வடித்துள்ளது. இந்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்னிருக்கும் மறைக்கப்பட்ட காரணிகளை, ஒரு சூதிரதாரியின் வேட்டையை சொல்கிறது.இத்தொடரின் வடிவமைப்பாளர் நீரஜ் பாண்டே கூறியதாவது...
“ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இந்த கதை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே யோசித்துகொண்டிருந்தேன். இது மிகப்பெரும் கதை, அதன் பின்னணி ஆதாரங்கள், தரவுகள், ஆராய்ச்சிகள் எல்லாம் மிகப்பெரும் பணியை கோரியது. இத்தனை பெரிய கதையை ஒற்றைப்படமாக கூறவியலாது. கதை கூறும் தளமே மாறிவிட்ட இந்த இணைய உலகு இப்போது இந்த கதையை கூற பெரும் ஆதரவாக அமைந்துள்ளது. இரண்டு தசாப்தங்கள் நீடிக்கும் இந்தக்கதையை பல உண்மைசம்பவங்களுடன் பரபரப்பு சிறிதும் குறையாத மிகபிரமாண்ட வடிவில் உருவாக்கியுள்ளோம். முதல் முறையாக 2001 பாராளுமன்ற தாக்குதல் இத்தொடர் மூலம் திரையில் வரவுள்ளது. ஆனால் அதைத்தாண்டி எண்ணற்ற ஆச்சர்யங்கள் இத்தொடரில் கொட்டிக்கிடக்கிறது.
நடிகர் கே கே மேனன் கூறியதாவது...
Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்திய உளவுத்துறையின் நேர்த்தியான வடிவத்தை திரையில் வழங்கியிருக்கிறது. உண்மையில் முகம் மறைக்கப்பட்ட நிஜ ஹீரோக்கள் நம் உளவுத்துறை அதிகாரிகள் தான். இயல்பில் அவர்கள் நம்மை போல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். மக்கள் கூட்டத்தில் இணைந்து, மக்களோடு மக்களாக இருப்பார்கள் ஆனால் 24 மணிநேரமும் உளவாளியாகவே விழித்திருப்பார்கள். நாட்டுக்கு ஏறபடும் அச்சுறுத்தல்கள், ஆபத்துகளில் இருந்து நாட்டை காப்பார்கள். Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்த உன்னதமிக்க உளவாளிகளின் வாழ்வை அழகாக திரையில் வடித்துள்ளது. இந்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்னிருக்கும் மறைக்கப்பட்ட காரணிகளை, ஒரு சூதிரதாரியின் வேட்டையை சொல்கிறது.