திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம்

SIBY HERALD

மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.

இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.

அதுமட்டுமல்ல. இங்கிலாந்து, நஜீரியா தொடங்கி அமெரிக்கா வரை, இப்படம் லண்டன் சர்வதேச திரை விருது விழா, மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலபோ சர்வதேச இசை மற்றும் திரைப்பட விழா  மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற மாண்ட்கோமெரி சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பெரும் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பிடித்தது.

சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வந்திருக்கிறது.

‘கயிறு’ இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. விஜய் ஷாலினி நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான  ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநர். இது தவிர கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.

Find Out More:

Related Articles: