
ஒன்றுபட்ட திரைகளமாக விளங்கிய தென்னிந்திய சினிமாவில், பற்பல தெலுங்கு மொழி நடிகர்கள் தமிழ் மொழியை, சென்னையை தாயகமாக கொண்டு போற்றி வந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் மோகன்பாபுவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது மிகப்பெரும் திரை வரலாற்றில் தமிழுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பல்லாண்டுகளாக இங்கு அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. அவரது வாரிசுகளுக்கு இங்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அவர்கள் படித்தது, இளமை காலத்தை கழித்தது எல்லாமே இங்கு தான். அவர்களுக்கும் இங்கே பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக மனோஜ் மஞ்சு பெரும் ரசிகர்களை இங்கு சம்பாதித்துள்ளார். அவரது நடிப்பில் வித்தியாசமான கதைகளங்களில் உருவான தெலுங்கு படங்கள், தமிழில் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரு வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக “என்னை தெரியுமா” எனும் பரபர திரில்லர், “பிரயாணம்” எனும் நேரடி தெலுங்கு படமும் இங்குள்ள ரசிகர்களின் இதயம் கவர்ந்த படைப்பாக இருந்து வருகிறது.
தற்போது ரசிகர்களை மகிழ்விக்க புத்தம் புது அவதாரத்தில் அவர் நடித்திருக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமீபமாக வலுவான கதையம்சம் கொண்ட தென்னிந்திய படங்கள் வட இந்தியாவிலும் பெரு வெற்றி பெற்று வருகிறது. தற்போதைய காலகட்டதில் மொழி எல்லைகள் கடந்து தென்னிந்திய படங்களும் இந்திய படமாக அனைத்து இடங்களிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.அந்த வகையில் வெளியாகியுள்ள “அஹம் பிரம்மாஸ்மி” ஃபர்ஸ்ட் லுக் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் படம் வலுவான கதையம்சம் கொண்ட அழுத்தமான படமாக இருக்குமென்று நிரூபித்துள்ளது. இப்படம் மார்ச் 6 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில் நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவங்களை வெளிப்படுத்தும் மஞ்சு மனோஜின் தோற்றம் அனைவரையும் ஈர்த்து தீயாக பரவி வருகிறது.
முழு இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் “அஹம் பிரம்மாஸ்மி” திரைப்படத்தை மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி MM Arts நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் இப்படத்தினை வழங்குகிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் ஶ்ரீகாந்த் N ரெட்டி.
அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். சன்னி குருபாதி ஒளிப்பதிவு செய்கிறார். ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம் பாடல்கள் எழுதியுள்ளனர். தம்மிராஜு படத்தொகுப்பு செய்கிறார். விவேக் AM கலை இயக்கம் செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். திவ்யா நாரயணன், கல்யாண் சக்ரவர்த்தி கூடுதல் வசனங்களை எழுதியுள்ளனர். தீபக் போஜ்ராஜ் விளம்பர வடிவமைப்பு செய்கிறார்.
தொட்டம்புடி சுவாமி இணை இயக்கம் செய்ய, வெங்கட் சல்லகுல்லா நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.