கேள்விகள் அனைத்தும் இந்தி,ஆங்கிலத்தில் இருந்தன, பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்ப, தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தேர்வை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வை நடத்தும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வு நடத்தப்படும் என அறிவித்து ஞாயிறு அன்று நடந்த தேர்வை ரத்து செய்தார்.