இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த சனிக்கிழமை அன்று, தனது லண்டன் சொத்தை 1,830 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இது இந்திய வர்த்தகத்தில் உள்ள கடனை அடைக்கவும், நிறுவனத்தை மேம்படுத்தவும் இந்தியா புல்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்கள் கொடுத்துள்ளதாகவும், இது தனது லண்டன் சொத்தினை 200 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பி.எஸ்,இக்கு அளித்துள்ள அறிக்கையில், இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் தூணை நிறுவனமான செஞ்சுரி லிமிடெட் நிறுவனத்தின், அதன் முழு பங்குகளையும் விலக்கிக் கொண்டுள்ளது. இது லண்டனில் உள்ள மறைமுகமான சொத்து என்றும் கூறப்படுகிறது. இந்த சொத்து விற்பனை மூலம் இந்த நிறுவனம் தனது இந்திய வணிகத்தில் கவனம் செலுத்துவதற்கும் கடனைக் குறைப்பதற்கும் தனது திட்டங்களை முன்னரே வெளியிட்டது. லண்டனில் நிலவி வரும் பிரெக்ஸிட் பிரச்சனைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையின் வெளிச்சத்தில் லண்டன் சொத்து சந்தை மந்தமாகவே உள்ளது. இது பிரெக்ஸிட் வாக்கெடுப்பு முடிவின் காலத்திலிருந்தும் நீடித்த தேய்மானத்தைக் கொண்டுள்ளது என்றும் ஒர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.