ஆபத்துங்க... ரொம்ப ஆபத்து... என்று ரெட் கொடியை ஆட்டி பயமுறுத்தி உள்ளார் மத்திய அமைச்சர். ஆனால் உண்மையும் இருக்குங்க...கடல்வழி பயங்கரவாதம் நாட்டுக்கே மிகப்பெரும் ஆபத்து என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலோர பாதுகாப்பு குறித்து மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மும்பையில், 2008ல், கடல் வழியாக வந்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் கடல் வழி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். (அப்போ... அதுக்கு முன்னாடி உணரவே இல்லீங்களா?)கடல் வழி பயங்கரவாதம், மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது;

பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உலக நாடுகள், இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகின்றன; இந்தியாவும், கண்காணிப்பை பலப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். (உண்மைதான்... கடல் வழி நமக்கு என்றுமே ஆபத்துதான்)நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Find out more: