என்னை அடித்து கொள்ளுங்கள்... என் மக்களை விட்டு விடுங்க... இது புராண காலத்து மன்னர் பேசியதா என்று கேட்காதீர்கள்... நம்ம டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் இப்படி கேட்டுக் கொண்டுள்ளார்.


டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் மோடியை நான் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு சண்டை என்னுடன் தான்.


அதனால் நீங்கள் விரும்பினால் என்னை அடித்துக் கொள்ளுங்கள். என்னை பழிவாங்கிக் கொள்ளுங்கள். டில்லி மக்களை கஷ்டப்படுத்தாதீர்கள். டில்லியில் நாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை தடுக்க முயற்சிக்காதீர்கள்.


சோலார் ஊழல் பற்றிய எங்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள். உண்மை வெளியே வரட்டும் என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். (ஏங்க... நீங்க நல்லவரா... இல்ல கெட்டவரா... தெரியலையேன்னு சொல்லாதீங்க...)


அதே சமயம், ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 21 பேர் தகுதிநீக்கப்படும் விவகாரம் தொடர்பாக பேசிய கெஜ்ரிவால், பா.ஜ., தலைவர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள். அதனால் வேண்டுமென்றே ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் துணை நிலை ஆளுனர்.


பா.ஜ., எம்.பி., தவாரின் கொலையை மூடி மறைக்க பார்க்கிறார் என கடுமையாக பேசி உள்ளார். கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள டில்லி பா.ஜ., எம்.பி., மகிஷ் கிரி, ஜீன் 19ம் தேதி என்னுடன் இது பற்றி பொது விவாதத்திற்கு கெஜ்ரிவால் தயாரா? எங்களுக்கு எதிராக ஆதாரம் இருந்தால் கெஜ்ரிவால் அதனை நிரூபிக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.


நடத்துங்க... நடத்துங்க... ஆஹா சபாஷ் சரியான போட்டி என்று தங்கள் தலைவிதியை நொந்து போய் உள்ளனர் மக்கள்.


Find out more: