டேராடூன்:
மழை என்றால் உத்தரகாண்ட் மக்களுக்கு அச்சம்தான். காரணம் கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட அதிகளவு மழை வெள்ளம்தான். தற்போது கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து மக்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.


நம்ம ஊரு சென்னை எப்படி மழையில் சிக்கி தவிச்சிச்சோ... அதைவிட பல மடங்கு சிரமப்பட்டவர்கள் உத்தரகாண்ட் மக்கள். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்களும், உயிர்களும் இன்று நினைத்தாலும் உள்ளத்தை நடுநடுங்கச் செய்யும்.


தற்போது உத்திரகாண்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில்தான் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து ரெட் கொடி ஆட்டியுள்ளது.


அடுத்த 2 நாட்களுக்கு இந்த கனமழை தொடரும் என்பதால் மக்கள் அச்சத்தின் உச்சத்தில் உள்ளனர். வழக்கம் போல் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் நாங்க ரெடின்னு களத்தில் குதித்து தயாராக உள்ளனர். இருந்தாலும் மக்களுக்கு அச்சம் அச்சம்தானே?


வங்க கடலுக்கும் பஞ்சாப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு பகுதி மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதனால் நைனிடால், உத்திரகாசி, திக்ரி, சாம்பவாத் போன்ற பகுதிகளில் மிக அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே மக்களே குடையை எடுத்து போவதை விட வீட்டில் பத்திரமாக இருங்க...



Find out more: