ஐதராபாத்:
மக்கள் தற்கொலைன்னா... பத்திரிகையில் ஒரு காலத்திற்கு சின்ன செய்தி அம்புட்டுதான். ஆனால் போலீஸ் உயரதிகாரி மர்மச்சாவுன்னா... அந்த டிபார்ட்மெண்டே பரபரப்பை விலைக்கு வாங்கிடுமே... அதுபோல்தான் நடந்துள்ளது.
விசாகப்பட்டினம் ஏ.எஸ்.பி., மர்மச்சாவு அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்காங்க...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் பாடேரு பகுதி ஏ.எஸ்.பி.,யாக இருந்தவர் சசிக்குமார். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தலையில் குண்டு அடிபட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டில் அவர் மட்டும்தான் இருந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போய் விசாரிக்கையில் அவரது இல்லத்திற்கு பாதுகாப்பாக நின்ற போலீசார் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா?
பலத்த துப்பாக்கி சப்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்த போது பிணமாக கிடந்தார். ஆனால் எப்படி நடந்தது என்று தெரியாது என்று சொல்லியிருக்கார். இது பலத்த சந்தேகங்ளை எழுப்பி உள்ளது.
ஏ.எஸ்.பி., வைத்திருந்த துப்பாக்கியில் கைபட்டு தவறுதலாக வெடித்திருக்கலாமா அல்லது தற்கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாகப்பட்டினத்தை ஏ.எஸ்.பி., யின் மர்மச்சாவுதான் கலக்கி வருகிறது. சீக்கிரம் கண்டுபிடிங்க சார்.