வின்டோக்:
இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவோம்... நமீபியா உறுதியான குரலில் நம்ம ஜனாதிபதியோடு கைகுலுக்கி தெரிவித்துள்ளதாம்.
அரசு முறைப் பயணமாக, ஆப்பிரிக்கா போன ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நமீபியா சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் ஹேஜ் கீன்காப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


பின்னர் அந்நாட்டு அதிபர் தெரிவிக்கையில், அணுசக்தியை ஆக்கப்பூர்வ முறையில் பயன்படுத்துவதற்காக, இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை மேற்கொள்வோம் என்று உறுதியாக தெரிவித்தார்.


இந்திய நிறுவனங்கள், நமீபியாவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். அது சரி... கிவ் அண்ட் டேக் பாலிசி இல்லாம இருக்குமா?



Find out more: