ஹைதராபாத்:
பாயாசத்தை கொடுத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த போலி சாமியார் வகையாக போலீசில் மாட்டியுள்ளார். பாயாசத்து ஆசைப்பட்ட தொழிலதிபர் இனி பாயாசம் என்றாலே அலறிவிடுவார்.


பூஜை நடத்துவதாக கூறி, பாயாசத்தில் மயக்க மருந்து கொடுத்து தொழிலதிபரிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் எம்.எல்.ஏ காலனி பகுதியில் மதுசூதனன் ரெட்டி என்பவர் தன் மனைவி வித்யாவதி மற்றும் மகன் சந்தோஷ்ரெட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.  பல பிரச்னைகள் தொடர்ந்ததால் ஒரு சாமியாரை வீட்டிற்கு வரவழைத்து பூஜை செய்துள்ளனர்.


நேற்று காலை 10 மணி அளவில் பூஜை தொடங்கப்பட்டது. அந்த சாமியார் வீட்டின் நடுவில் ஒரு கோலத்தைப் போட்டு, அதில் வீட்டில் உள்ள பணம் முழுவதையும் அதில் வைக்க சொல்லியிருக்கிறார். எனவே வீட்டிலிருந்த ரூ.1.33 கோடியை கோலத்தின் மீது மதுசூதனன் வைத்துள்ளார்.


அப்புறம் நடந்ததுதான் கொடுமை. 4 மணி வரை பூஜை செய்த அந்த சாமியார்நா ன் வைத்து தரும் பாயாசத்தை குடித்து பூஜையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி தானே சமையலறைக்கு சென்று பாயாசம் தயார் செய்துள்ளார்.


கொஞ்சமும் யோசிக்காமல் அந்த 3 பேரும் பாயாசத்தை ரசித்து ருசித்து குடிக்க சிறிது நேரத்தில் தலைச்சுற்றி மயங்கி விழுந்தனர். அப்புறம் என்ன பணத்தோட சாமியார் எஸ்கேப். இந்நிலையில் உறவுக்கார பெண் மதுசூதனனுக்கு போன் செய்ய அவர் நெடுநேரமாய் எடுக்காததால் நேரில் வீட்டிற்கு சென்று பார்த்த போதுதான் விபரீதம் நடந்தது தெரியவந்துள்ளது. உடன் அந்த பெண் மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


மதுசூதனன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கிய போலீசார், பெங்களூரை சேர்ந்த போலி சாமியார் சிவானந்த பாபாவைவும்,  அவருடன் வந்த ஷாஜகான் என்ற டிரைவரும் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த சாமியார் மதுசூதனன் குடும்பத்தினருக்கு பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு பணத்துடன் எஸ் எஸ்கேப் ஆன விபரம் தெரியவந்தது.


Find out more: