சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி, மக்கள் நலக்கூட்டணின்னு ஒன்று இருந்ததே தெரியுமா? இப்ப இருக்கான்னு எதிர் கேள்வி கேட்காதீங்க... இந்த கூட்டணியிலிருந்து எஸ்கேப் ஆக தமாகா ரெடியாகிடுச்சாம்...
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரபோகுது. சட்டசபையில விட்டதை பிடிக்க கட்சிகள் மும்முரமாகிட்டாங்க. மக்கள் நலக்கூட்டணியோட சேர்ந்து சட்டசபை தேர்தலில் முதுகில் "டின்" வாங்கினது போதும்னு தமாகா முடிவு செஞ்சிடுச்சாம். இதன் நிர்வாகிகள் தலைவர் வாசனை நெருக்கி இருக்காங்க... யோசிச்சவரு... இப்ப திருவாய் மலர்ந்திருக்கார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாகதான் இந்த கூட்டணியில் இணைஞ்சு தொகுதி உடன்பாடு நடந்துச்சு. உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் தனித்து நின்னு ஜெயிக்க "தில்" இருக்கு, என்ற ரீதியில் சொல்லியிருக்காரு. அப்படின்னா... என்ன அர்த்தம்.
உள்ளாட்சி தேர்தலில் தனிச்சு போட்டி போடபோறோம்னு தானே அர்த்தம். அப்ப கூட்டணியை விட்டு தமாகா எஸ்கேப் ஆக போகுதுன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்கப்பா...