சென்னை:
ஏற்றுக் கொண்டு விட்டார்கள்... ஏற்று கொண்டுவிட்டார்கள் என்று டில்லியில் இருந்து சுடச்சுட தகவல்கள் வந்துள்ளன. எதை பற்றி தெரியுங்களா?


கடந்த 2 நாட்களாக செய்திகளின் தலைப்பானவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன்தான். காரணம் தனது பதவியை இவர் ராஜினாமா செய்கிறேன் என்று டில்லி தலைமைக்கு கடிதம் அனுப்பியதுதான்.


இந்நிலையில் இளங்கோவனின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டது என்று தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றது என்னவோ 8 இடங்கள் மட்டுமே. இதான் அவர் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. டில்லிக்கு கூப்பிட்டு தலைமை விளக்கம் கேட்டபோதே தனது பதவிக்கு மேல் கத்தி தொங்குவதை உணர்ந்துவிட்டார் இளங்கோவன். தலைமை முடிவு எடுத்து தன்னை நீக்குவதை விட தானே ராஜினாமா செய்வது கவுரவம் என்று ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்து விட்டார்.


இந்நிலையில்தான் இளங்கோவனின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. 


Find out more: