சென்னை:
சென்னையை ஒரு உலுக்கி உலுக்கி வருவது சுவாதி கொலைதான். நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வைத்து இன்போசிசில் பணியாற்றிய சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் ரணமாக பதிவாகி உள்ளது. இந்த கொலையில் குற்றவாளி கைது செய்யப்படாதது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.


சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை தொடர்பாக ரயில்வே போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர். இந்த கொலை தொடர்பான முழு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாதது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இந்த வழக்கை ரயில்வே போலீசார் மாநில போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 



Find out more: