கேரளா:
கேரளாவில் கொட்டி தீர்க்கும் பருவமழை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்பதால் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது கேரளா. இப்போது அங்கு அனைத்து பகுதியிலும் கனமழைதான். இதனால் பல இடங்களில் வாழை உட்பட பயிர்கள் கடும் சேதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மழை இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என்று கொச்சி வானிலை மையம் அறிவித்துள்ளது.
சூறாவளி காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. மீனவர் கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால் வீடுகள் இடிந்துள்ளன. தொடர்ந்து கடல் சீற்றமாக இருக்கிறது. இதனால் ஒரு வாரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிச்சிருக்காங்க...
![](http://media.newindianexpress.com/rain.jpg/2015/06/09/article2856998.ece/alternates/w620/rain.jpg)