மதுரை:
அரசு டாக்டர்கள் செய்யாத பிரசவத்தை 108 ஆம்புலன்ஸ் செய்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?


மதுரை மேலூர் கொட்டக்குடியை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ரேகா கர்ப்பம் ஆனார். பிரசவ வலி ஏற்பட்டதால் வந்தது 108. உடன் அவர் திருவாதவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.


அங்குதான் காத்திருந்தது பிரச்னை. ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆண்டிப்பட்டி விலக்கு அருகே வந்தபோது ரேகா பிரசவ வலியால் அவதிப்பட்டதை கண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விமல், டிரைவர் இருவரும் சேர்ந்து பிரசவம் பார்க்க இப்போது தாயும், சேயும் நலம்...


108க்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Find out more: