புதுச்சேரி:
கபாலி மட்டும் இல்லீங்க... எந்த படத்துக்கும் திருட்டு சிடி வரக்கூடாது என்ற கோரிக்கையுடன் கவர்னரை சந்தித்துள்ளனர் விநியோகஸ்தர். எங்கு தெரியுங்களா?


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வரும் 22ந் தேதி வெளிவந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எகிறி போய் கிடக்கிறது. இந்நிலையில் கபாலியின் புதுச்சேரி உரிமத்தை லெஜண்ட் மீடியா வாங்கியுள்ளது.


இதன் உரிமையாளர் ஜி.பி.செல்வகுமார், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். என்ன தெரியுங்களா?


“பெரும் தொகை கொடுத்து 'கபாலி' உரிமையை வாங்கியுள்ளோம். நம்ம ஊரில்  திருட்டு விசிடி அதிகம். 'கபாலி'க்கு மட்டுமல்ல எந்த படத்தின் திருட்டு விசிடியும் வராமல் பாதுகாப்பு தரவேண்டும்” என்று வைத்தனர் ஒரு பெரிய கோரிக்கையை. 


அதுமட்டுமா? புதுச்சேரி நகரின் தூய்மைக்கு பாடுபடுவோருக்கு கபாலியின் முதல் ஷோவை இலவசமாக பார்க்க வைப்போம் என்றும் சொல்லியிருக்காங்க பாருங்க... அதுதான் ஹைலைட்.


உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னரும், முதல்வரும் சொல்லியிருக்காங்களாம். கிரண்பேடி புதுச்சேரி முதல்வர் ஆனதில் இருந்து பல்வேறு அதிரடிகளை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Find out more: