சென்னை:
மனம் கொதிக்க செய்த சம்பவத்தில் ஈடுபட்ட இதயமில்லாத மருத்துவ கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே இரு மருத்துவ மாணவர்கள், நாய் ஒன்றை மாடியிலிருந்து தூக்கி வீசிய செயல் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. கண்டன கணைகைளும் வழக்கும் பதிவான அவர்கள் தலைமறைவாகினர். 


நாகர்கோவிலைச் சேர்ந்தவர் கவுதம் சுதர்சன். நெல்லையைச் சேர்ந்துவர் ஆஷிஷ் பால். இவர்கள் இருவரும் கீழ்க்கட்டளை பகுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் ஒரு நாயை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி அதை வீடியோவிலும் படமாக்கி சமூக வலைதளங்களில் பதிவேற்ற வந்து விழுந்தது லைக்குகள் இல்லை...திட்டுக்கள்தான். இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தில் பணியாற்றும் ஆண்டனி கிளமென்ட் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையறிந்த 2 பேரும் தலைமறைவாக அவர்களை அவர்களின் பெற்றோர்களை பிடித்து வந்து போலீசில் ஒப்படைத்தனர்.தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர்.


இதற்கிடையில் இவர்கள் மருத்துவ படிப்புக்கே லாயக்கற்றவர்கள். இவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கிய நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Find out more: