டாக்கா:
வங்காளதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் ரம்ஜான் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட முடியாத அளவிற்கு செய்துள்ளது.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் ரம்ஜான் தொழுகையின் போது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கிஷோர் கஞ்ச் என்ற இடத்தில் ரம்ஜான் தொழுகை நடந்தது. தொழுகை நடந்த இடத்துக்கு செல்லும் வழியில் நுழைவு வாயில் உள்ளது. இதன் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு தீவிரவாதி பிடிபட்டான். மேலும் பல தீவிரவாதிகள் அங்கு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.