தைபே:
தைவானை மிரட்டி வரும் பயங்கர புயலால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
சீனா அருகே தைவான் தீவு நாடு. இதன் அருகே 870 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. இந்த புயலால் தைவானுக்கு ஆபத்து என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் சூப்பர் புயல் என அழைக்கப்படும் அதிசக்தி கொண்டதாம். தைவானை நோக்கி புயல் முன்னேறி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புயல் கரையை கடக்கும்போது 250 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர சூறைக்காற்று வீசும், கடல் கொந்தளிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது பயங்கர சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.