சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் பல்வேறு "திடுக்" திருப்பங்கள் நடந்தப்படி உள்ளன. இந்நிலையில் ராம்குமாரின் கழுத்தை அறுத்த படங்களை எடுத்தது போலீசார்தான் என்று அடுத்த வெடிகுண்டை பற்ற வைத்துள்ளார் அவரது அப்பா.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ராம்குமார் ரத்தக்கறைகளுடன் இருக்கும் படங்களும் வெளியானது.
இளம்பெண் சுவாதி படுகொலை
இந்நிலையில் தினம் ஒரு செய்தியாக வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் ராம்குமாரின் அப்பா அடுத்த ஒரு வெடிகுண்டை பற்ற வைத்துள்ளார். என்ன தெரியுங்களா?
ராம்குமாரின் தந்தை பரமசிவன்
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராம்குமாரின் தந்தை பரமசிவன், ராம்குமாரின் கழுத்தை அறுத்த போட்டோவை எடுத்தது போலீசார்தான் என்று சொல்லியுள்ள அவர் அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று போலீசார் இரவு 11.30 மணியளவில் வீட்டு கதவை தட்டினர். முத்துகுமார் இருக்கிறாரா என்று கேட்டனர். எனது மகள் அப்படி யாரும் இங்கு இல்லை என்று கூறினார். அப்போது மின்சாரம் இல்லை என்பதால், நான் டார்ச் லைட் கொண்டு சென்று கதவை திறந்தேன்.
வெளியே நின்ற போலீசார் உங்க மகன் என்ன பண்ணிருக்கான் பாருங்கன்னு கூட்டிட்டு போனாங்க. அங்கு ஒரு காவலரின் கால் மீது எனது மகன் தலை தொங்கிப் போயி கிடந்தான். கழுத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன் இறந்துவிட்டதாக நான் நினைத்தேன். அங்கு நின்ற போலீசார் ராம்குமாரை போட்டோ எடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அப்போ உண்மையில் என்னதாங்க நடந்தது? விளக்கம் அளிக்க வேண்டியது போலீசார் கையில்தான் உள்ளது.