கோஹிமா:
போடு... தடையை போடு... என்று அரசு தடை போட்டு கண்டிப்பு காட்ட ரெடியாகிக்கிட்டு இருக்காம் அரசு. எதற்கு தெரியுங்களா?


நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்க கூடாது என்றுதான் விழ உள்ளது அரசின் தடை. நாகலாந்தில் நாய் இறைச்சி, உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் நாய் இறைச்சி சமைக்கப்படுகிறது.


இந்த மக்களுக்கு நாய் இறைச்சி ரொம்ப அதிகம் பிடிப்பதால் விற்பனை கனஜோர். இதற்காக தெரு நாய்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் மேல புகார் சொல்ல நாகாலாந்தில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாம்.


இந்த தடை வருவதற்கு முன்பே நாய் இறைச்சியை குறைத்துக் கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்களாம்.


Find out more: