புதுடில்லி:
இரு சக்கர வாகனத்தில் அழைத்துச்செல்லும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மேட் போடணும் என்று அதிரடியாக உத்தரவிட மத்திய அரசு யோசிச்சுக்கிட்டு வருதாங்க... எதுக்கு தெரியுங்களா?


சாலை விபத்துக்களில் தினமும் 34 குழந்தைகள் பலியாவதை தொடர்ந்துதான் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. 


கடந்த 2015ம் ஆண்டில் 17 வயதுக்கு கீழ்பட்ட சுமார் 12, 500 குழந்தைகள் சாலை விபத்துகளில் பலியாகியுள்ள அதிர்ச்சியான புள்ளி விபரம் மத்திய அரசை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இரு சக்கர வாகனங்களில் தான் அதிக குழந்தைகள் பலியாகியுள்ளது என்பது.


இதனால்தான் குழந்தைகளும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.



Find out more: