புதுச்சேரி:
பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை பொதுமக்கள் முன்னிலையிலேயே லெப்ட் அண்ட் ரைட் விட்டு விளாசிய கவர்னர் கிரண்பேடியால் அரசுதுறையினர் நடுநடுங்கி போய் உள்ளனர்.


புதுச்சேரி கவர்னராக பதவியேற்றது முதல், எல்லா டிபார்ட்மெண்டுகளிலும் அதிரடி ஆய்வு செய்து வருகிறார் கிரண்பேடி. அதுமட்டுமா? கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் தானும் இறங்கி சுத்தம் செய்வது என அதிரடிக்கிறார்.


இந்நிலையில் புதுச்சேரியில் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்களை நேரில் ஆய்வு செய்த கிரண்பேடி, அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றாத அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் அதிகாரிகளுக்கு விட்ட டோஸ் கிறுகிறுக்க வைத்து விட்டது. 


பின்னர் கவர்னர் கிரண்பேடி கூறுகையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு வேலையும் மக்களை ஏமாற்றுவதற்கு சமம். சரியாக பணி செய்யாவிட்டால் உங்கள் வேலையை நீங்கள் இழக்க நேரிடும். பஸ் ஸ்டாப் என்பது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பிற்கானது அல்ல என்று தெரிவித்தார். இனியாவது பணிகளை தாமதமின்றி செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.



Find out more: