பீஜிங்:
வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பு வந்தாலும் எங்களுக்கும் உரிமை உண்டு என்று சீனா தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது. 


தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்து விட்டது. ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுகுறித்த வழக்கில்தெ ன் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் தீர்ப்பு கூறி உள்ளது. இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.


ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது. தென் சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சீனா பிடிவாதம் பிடிப்பதால் உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Find out more: