ஜம்மு:
ஊடுருவினால் வாலை ஒட்ட நறுக்குவேம் என்று பாதுகாப்பு படையினர் அதிரடி காட்டி வருகின்றனர். அதுபோன்ற சம்பவம்தான் இதுவும்.


காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை தூண்டி விடுகிறது பாகிஸ்தான் என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
நாட்டுக்குள் இப்படி பிரச்னை என்றால் எல்லையில் ஊடுருவில் சதிகார வேலை செய்ய பயங்கரவாதிகள் பலவாறு திட்டம் போட்டு வருகின்றனர்.


ஆனால் இதற்கு சம்மட்டியால் அடிப்பது போல் பதிலடி கொடுத்து வருகின்றனர் பாதுகாப்பு படையினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் முயற்சியை தற்போது இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.


ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை முறை மூக்கறுப்பட்டாலும் மீண்டும் மீண்டும் வாலாட்டி வருகின்றனர் பாக். தீவிரவாதிகள்.


Find out more: