சென்னை:
எங்களால் இனி முடியாதுங்க... எங்க பணத்தை கொடுத்துடுங்க... காலில் விழுந்து கதறிய வேட்பாளர்களின் மனைவிகளால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


விஷயம் இதுதான்... கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து 106 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் மரணஅடி கொடுத்தனர்.  ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வேட்பாளர்கள் ஜெயிக்கவில்லை. காரணம் கூட்டணிதான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் தே.மு.தி.க., சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களிடம் கட்சி மேலிடம் முன்பணமாக பல லட்சம் ரூபாய் வசூலித்திருந்ததாம். பல வேட்பாளர்கள் கடன் வாங்கிதான் தேர்தல் செலவுகளை பார்த்துள்ளனர். 


தேர்தலில் அடைந்த தோல்வி... டெபாசிட் கூட கிடைக்காத நிலை.. கடன்காரர்களின் நெருக்குதல் என்று தேமுதிக வேட்பாளர்கள் பலவாறு பாதிக்கப்பட கட்சிக்கு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு விஜயகாந்திடம் வலியுறுத்தி வந்தனர்.


இது தொடர்பாக, கட்சி மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் சென்னை தே.மு.தி.க.,அலுவலகத்திற்கு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்து வந்துள்ளனர். அவர்கள் விஜயகாந்த் காலில் விழுந்து, கதறி அழுது தங்கள் பணத்தை தருமாறு கேட்டதால் பெரும் பரபரப்பு உருவானதாம்.


இதற்காவது விஜயகாந்த் மசிவாரா என்று பார்க்கலாம்.?


Find out more: