புதுடில்லி:
வெளிவராத பொக்கிஷம் வெளிவந்துள்ளது தற்போது என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. 


என்ன தெரியுங்களா? மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வெளி வராத கடிதம்தான் அது. 2012-ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.


மம்தா பானர்ஜியின் உணர்ச்சிகர கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலனை செய்தார். ஆனால் அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க முடிவு செய்தது.

மம்தா பானர்ஜி


மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு விளக்க ஒரு கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அந்த முடிவை பற்றி தெரிவிக்க ஒரு கடிதத்தையும் கலாம் எழுதி வைத்திருந்தாராம். 
தீவிர பரிசீலனைக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை கலாம் எடுத்தார். இதனால் போட்டியிடுவது குறித்த விளக்க கடிதம் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.


இந்நிலையில்தான் இந்த கடிதம் கலாமின் உதவியாளர் பநீஜன் பால் சிங்கின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் மக்கள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?


“டியர் இந்தியன்ஸ்...உங்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எண்ணிக்கை (எம்.பி.களின் ஆதரவு) எனக்கு எதிராக இருப்பதை தெரிந்தே போட்டியில் நுழைகிறேன். அருதி பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியடைய போகிறேன் என்று தெரிந்தே களமிறங்க முடிவு செய்துள்ளேன்.


ஆனால் நான் ஏற்கனவே மக்களின் இதயங்களை வென்றுவிட்டேன், இந்த தேர்தலில் போட்டியிடுவது என் கடமை. நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை என்று நீளும் அந்த கடிதத்தில் இறுதியில் கூறியிருப்பது மக்களை அவர் எந்தளவிற்கு உயர்வாக நினைத்திருந்தார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


தற்போது நான் ஒரு வேட்பாளர். ஒரு வேட்பாளர் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். எனக்கு ஒரு கட்சி ஆதரவோ, செல்வாக்குமிக்க குழுவின் ஆதரவோ இல்லை. எனவே அன்புக்குரிய இந்தியர்களே.. எனக்காக நீங்கள் பிரசாரம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இது ஒரு அரசியல் அறிக்கையோ அல்லது தேர்தலுக்கான தாரக மந்திரமோ இல்லை. இவை என்னுடைய இதயத்திலிருந்து நேரடியாக வரும் சில வார்த்தைகள்” என்று கூறி கீதையிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள்காட்டி கடிதத்தை முடித்துள்ளார் அவர்.
இந்த கடிதம்தான் மக்களை தற்போது கண் கலங்கச் செய்து வருகிறது. இந்தியா மீதும் மக்களின் மீதும் அவர் எந்தளவிற்கு அன்பு கொண்டு இருந்தார் என்பதற்கு இந்த கடிதமே சாட்சியாக உள்ளது. ஆனால் அரசியல் என்ற வேங்கை அந்த நல்ல மனிதரை கிழித்துவிட்டது என்பதுதான் உண்மை. 


Find out more: