மிசோராம்:
வயசு என்னவே 72... மனைவிகள் எண்ணிக்கையே 38... அப்ப குழந்தைகள்... அந்த எண்ணிக்கை பெரிசுங்க... விஷயத்தை பாருங்களேன்.
மிசோரம் மாநிலத்தில் 72 வயதான முதியவர் சியோனா சனா என்பர் 38 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக்குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியதுதான் டாக் ஆப் மிசோராம் ஆகியுள்ளது.
சியோனா சனா தனது முதல் திருமணத்தை 1959-ம் ஆண்டு தனது 15-ம் வயதிலும், தனது கடைசி திருமணத்தை 2004-ம் ஆண்டு தனது 60-வது வயதிலும் செய்துகொண்டார். கின்னசுக்கு எழுதி போடுங்க... சேர்த்துக்குவாங்க... என்ன ஒரு வில்லத்தனம்...
மிசோரம் மாநிலம் பக்தவாஸ் தஸ்க்நுக் கிராமத்தை சியோனாவின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என கூறப்படுகிறது. இவங்களை பார்க்க வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இப்போ அந்த கிராமமே ஒரு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாகி விட்டது. ஏதோ கிராமத்துக்கு செஞ்ச உதவின்னு எடுத்துக்க வேண்டியதுதான்.