புதுடில்லி:
அதெல்லாம் இல்ல... உரிமைகள் பறிக்கப்படாது என்று சொல்லியிருக்காருங்க... மத்திய அமைச்சர். என்ன விஷயம்ன்னா?


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போதுதான் இதை அவர் தெரிவித்துள்ளார். அவர் என்ன சொன்னாருன்னா! கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.


மாநில அரசுகளுடன் இணைந்தே மத்திய அரசு பணியாற்றி வருகிறது. புதிய கல்வி கொள்கையால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படாது என்று சொல்லியிருக்கிறார்.


மேலும் அவர் பேசுகையில், புதிய கல்விக் கொள்கை குறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள் வரும் 31-ம் தேதிக்குள்ளும், பார்லி., உறுப்பினர்கள் ஆக., 15-ம் தேதிக்குள்ளும் தெரிவிக்கலாம் என்றார். புதிய கொள்கை மாணவர்களை பாதிக்கக்கூடாது என்கின்றனர் பொதுமக்கள்.



Find out more: