ஆந்திரா:
எத்தனை செய்திகள்... எத்தனை உயிர்கள் பலி... விஷயம் தெரிந்தாலும் செல்பி மோகத்தில் உயிரை விடுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துதான் செல்கிறது.


தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க சென்ற மாணவர் ரயில் மோதி பலி ஆன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவனின் பெற்றோர் கதறிய கதறல் ஆந்திராவையே அதிர செய்துவிட்டது. 


 இந்த கால இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி மோகம் ஒரு போதையாகவே பிடித்து ஆட்டுகிறது. இதனால் பலர் பலியான சம்பவங்கள் தெரிந்தும் திருந்தாமல் உள்ளனர். இதுவும் அந்த வகைதான். 


ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் நெரவாடா மெட்டா பகுதியைச் சேர்ந்தவர் சபீர்பாஷா. இவரது மகன் இத்தூருஸ் பாட்சா (20)  என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் ரயில் வேகமாக செல்லும்போது அதன் அருகே நின்று செல்பி எடுக்க விரும்பினார். (என்ன ஒரு ஆசை...?)


தனது நண்பர் ஹரிஸ்சுடன் கல்லூரி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றனர். ரயைல் வரும் போது செல்பி எடுக்க முயல... ரயில் அதற்குள் வேகமாக வந்துவிட்டது. உடன் சுதாரித்த ஹரிஸ் எஸ்கேப் ஆக இத்தூருஸ் மீது ரயில் மோதியது. இதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். சம்பவம் அறிந்து வந்த  மாணவரின் பெற்றோர் அழுத அழுகை ஆந்திர மாநிலத்தையே உலுக்கி விட்டது. செல்பி மோகம்... போதையாக பரவி வருகிறது. இதற்கு உயிர் பலிதான் அதிகமாகிறது. 



Find out more: