திரிபோலி:
அதிர்ச்சி... அதிர்ச்சி... என்று பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த செய்திதான் இது.


மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்ற அகதிகள் படகில் 21 பெண்கள் பிணம் கண்டுபிடிக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம்.


ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் ஆகி வருகின்றனர். நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்துள்ளது.


லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அதிர்ச்சியோ... அதிர்ச்சி. காரணம், அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கண்டுபிடிக்கப்பட்டது. உடன் மருத்துவக்குழுவினர் படகில் இருந்த 50 குழந்தைகள் உள்பட 209 பேரை மீட்டனர். 


22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு சில பெண்கள் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. இதனால் அதிர்ச்சியின் எல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முழுமையான தகவல்கள் விசாரணைக்கு பின்பே தெரிய வரும் என்று மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவித்தனர். 


Find out more: