ஐதராபாத்:
மனிதர்கள்தானா... இவர்கள் மனிதர்கள் தானா... மனிதாபிமானமற்ற அரக்கர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. காரணம்....
ஐதராபாத்தில் 3 நாய் குட்டிகளை 5 இளைஞர்கள் சேர்ந்து உயிருடன் எரித்து அதனை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றிய செயல்தான் மக்களை இப்படி கேட்க வைத்துள்ளது.
ஐதராபாத் முஷீராபாத் பகுதியில் 5 இளைஞர்கள் சேர்ந்து தீமூட்டுகின்றனர். பின்னர் அதில் உயிருடன் 3 நாய் குட்டிகளை வீசுகின்றனர். தீயின் வெம்மையால் அந்த நாய் குட்டிகள் கத்திக் கொண்டே தப்பிக்க முயற்சிக்கும் போது அந்த மனித அரக்கர்கள் அந்த குட்டிகளை மீண்டும் தீயில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொல்கின்றனர்.
இக்கொடூர சம்பவத்தை வீடியோவாக வேறு எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றி உள்ளனர். இதை பார்த்த மக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ள்ளனர்.
இதேபோல், ஐதராபாத் நம்பல்லி ஏரியாவில் நாயை ஒருவர் சுட்டுக் கொல்லும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்ன மனிதர்கள்யா.. நீங்கள்?