ஓஸ்லோ:
நியாயம்... அனைவருக்கும் ஒரே நியாயம்தான் என்று தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்ட போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


படகில் சென்ற போது கவச உடை எடுத்து செல்ல மறந்து விட்டதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டுள்ளார் போலீஸ்காரர் ஒருவர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது நார்வே நாட்டில்தான். 


நார்வே நாட்டில் மக்கள் சட்ட விதிகளை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் என்பதே இல்லை என்பதுதான் உண்மை. அந்த நாட்டில் போலீஸ்காரர் ஒருவர் விதிமுறைகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டுள்ளார்.


அந்த போலீஸ்காரர் ஆர்னேஸ்டேவன். இவர், ரோந்து படகு கண்காணிப்பு போலீஸ்காரராக உள்ளார். இப்படகில் செல்பவர்கள் கண்டிப்பாக கவச உடை அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஆர்னேஸ் படகில் சென்ற போது கவச உடை எடுத்து செல்ல மறந்து விட்டார்.


இதையடுத்து அவர் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டார். மொத்தம் ரூ.3,600 அபராதம் விதித்து உடன் அவர் அந்த பணத்தை கட்டினார். இதுபற்றி இணைய தளங்களிலும் தகவல் வெளியானது. இப்போது அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Find out more: