திருவள்ளூர்:
காற்றுக்காக வெளியில் தூங்கியவர்கள் நரியால் கடிப்பட்ட சம்பவம் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதி உள்ளது. இதில் 10 ஆயிரத்தும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் வீட்டுக்கு வெளியில் காற்றுக்காக தூங்கிக்கொண்டிருந்தனர்.
இதில் சூர்யா (23), சுமதி (43), ஆறுமுகம் (65) உட்பட 10க்கும் அதிகமானோர் நள்ளிரவில் தங்களை ஏதோ கடிப்பது போல் உணர்ந்து அச்சத்தில் எழுந்து உட்கார்ந்துள்ளனர். இதில் கை, கால்களில் ஏதோ விலங்கு கடித்துள்ளது. இதையடுத்து காலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று நாய் கடித்துள்ளதாக கூற அவர்களை பரிசோதித்த டாக்டர் கடித்தது நாய் அல்ல நரி என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.
இதனால் கடிப்பட்டவர்கள் அதிர்ச்ச அடைந்துள்ளனர். பின்னர் வீட்டு திரும்பி வந்து பார்த்தபோது குடியிருப்பில் பலரது வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகள், வான்கோழிகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த குடியிருப்பின் அருகில் சுடுகாடு இருப்பதால் அங்கு உணவு தேட வந்த நரிகள் இப்படி மக்களையும், கோழிகளையும் பதம் பார்த்துள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமடைந்துள்ளனர்.